கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் போராட்டம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் 456 பேருக்கும் நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் போது 456 தொண்டர் ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த பெயர் பட்டியல் கொழும்புக்கு அனுப்பப்பட்டிருந்தது.

ஆனாலும் அதிலும் 187 தொண்டர் ஆசிரியர்களின் பெயர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்முகப் பரீட்சைக்கு வருமாறு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் மற்றவர்களுக்கு கடிதம் வராததினால் தங்களுக்கு அநியாயம் இடம்பெற்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.

யுத்த காலத்தின்போது எதுவித கொடுப்பனவும் பெறாமல் பாடசாலைக்குச் சென்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதிலும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு 456 பேருடைய பெயர்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ள நேர்முகப்பரீட்சைக்கு 187 பேருக்கு மாத்திரமே கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் இப்போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்போராட்டத்தில் 60க்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.