திருகோணமலையில் தமிழ் இலக்கிய விழா

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் ஆண்டு தோறும் இடம்பெறும் தமிழ் இலக்கிய விழா இன்று திருகோணமலையில் பண்பாட்டு பேரணியுடன் ஆரம்பமாகியுள்ளது.

திருகோணமலை, அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் இருந்து ஆரம்பமாகிய இப்பண்பாட்டு பேரணி விழா உவர்மலை விவேகானந்தா கல்லூரியை வந்தடைந்துள்ளது.

இதில் அதிதிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers