16 வயது பாடசாலை மாணவி ஐந்து மாத கர்ப்பிணி! பரிசோதனையில் கண்டறிந்த மருத்துவர்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

செவனகல பிரதேசத்தில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

செவனகல - களுதியஹார பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான பாடசாலை மாணவியே கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவி 5 மாத கர்ப்பிணி என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் மாணவி தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

பொலிஸார், மாணவியின் தாயாரிடம் இது சம்பந்தமாக விசாரணை நடத்தியுள்ளனர். எனினும் இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என மாணவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

விசாரணைகளில் தெரியவந்த விடயங்களுக்கு அமைய மாணவியின் சிறிய தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாணவியின் கர்ப்பத்திற்கு மற்றுமொரு நபரும் காரணம் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

செவனகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.