பாதாள உலகக்குழு உறுப்பினருக்கு 3000 தோட்டக்களை வழங்கிய இராணுவ மேஜர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 3 ஆயிரம் தோட்டாக்களை பாதாள உலகக்குழு உறுப்பினருக்கு வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் பதவிய வெஹேரதென்ன பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் கட்டளை அதிகாரியாக கடமையாற்றும் இராணுவ மேஜர் உட்பட மூன்று இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சியம்பலாண்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேஜரின் சாரதியாக கடமையாற்றும் கோப்ரல் மற்றும் உதவியாளரா கடமையாற்று சிப்பாய் ஆகியோர் மேஜருடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரி 56 ரக தானியங்கி துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 3 ஆயிரம் தோட்டாக்களுடன் பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவர் அண்மையில் சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் நடத்திய விசாரணைகளில் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்படி மேஜர் உட்பட இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மேஜரிடம் இருந்து 13 சிம் அட்டைகள், 5 செல்போன்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதனை தவிர இராணுவ மேஜரின் வங்கிக் கணக்கில் 90 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை வைப்புச் செய்யப்பட்டுள்ளதையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இராணுவ கெப்டன் ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.