கொழும்பில் தமிழர்களை கடத்திய கடற்படை அதிகாரி விளக்கமறியலில்!

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இரண்டு பேரை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பான கைதுசெய்யப்பட்ட கடற்படை புலனாய்வு பிரிவின் லெப்டினட் கமாண்டார் சம்பத் தயானந்தவை எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா டி சில்வா இன்று உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபை ஊழியர்களான வடிவேலு லோகநாதன் மற்றும் ரத்னசாமி பரதநாதன் ஆகியோரை கடந்த 2009ஆம் ஆண்டு கடத்திச் சென்று காணாமல் போக செய்ததாக சந்தேக நபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பத் தயானந்த நேற்று கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

சந்தேக நபருக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு நீதவான், சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.