சற்று முன்னர் கொழும்பில் முக்கிய அதிகாரி ஒருவர் கைது!

Report Print Murali Murali in சமூகம்

பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.

இது குறித்த குரல் பதிவுகளை ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் நாமல் குமார வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி நாலக டி சில்வா வாக்கு மூலம் வழங்கியிருந்தார்.

இன்று ஐந்தாவது முறையாக வாக்கு மூலம் வழங்குவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவில் நாலக டி சில்வா முன்னிலையாகியிருந்த நிலையில், சற்று முன்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.