மட்டக்களப்பு தொப்பிகல நரக்கமுல்ல பிரதேச அரசாங்க காட்டில் சட்டவிரோதமாக வெட்டி விற்பனைக்காக மூன்று வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகை தேக்கு மரக்குற்றிகள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு- புல்லுமலை வட்டார வன காரியாலய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுணதீவு தாண்டியடி விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த இம்மர கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது.
மரக்கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறி மற்றும் இரண்டு உழவு இயந்திரங்களுடன் 34 தேக்கு மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சாரதிகள் உள்ளிட்ட சந்தேக நபர்கள் தப்பியோடி விட்டதாக வட்டார வன காரியாலய அதிகாரி என். நடேசன் தெரிவித்துள்ளார்.
விசேட அதிரடிப்படை கட்டளையதிகாரி அப்துல் லத்தீபின் பணிப்புரைக்கு அமைவாக பிராந்திய கட்டளையதிகாரி மாலன்தீசேராவின் வழிகாட்டலில் தாண்டியடி கட்டளையதிகாரி எம். எம். என். கே. மாரசிங்க தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.