பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அடுத்த வருடம் முதல் மீண்டும் இயங்கவுள்ளதாக அறிவிப்பு!

Report Print Mohan Mohan in சமூகம்

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அடுத்த வருடம் முதல் மீண்டும் இயங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக முன்வைக்கப்பட்ட பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, காங்கேசன்துறையில் 300 ஏக்கரில் தொழில்பேட்டை ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், முல்லைத்தீவில் ஓட்டுத்தொழிற்சாலையும், மட்டக்களப்பு – வாழைச்சேனையில் கடதாசித் தொழிற்சாலையும் அடுத்த வருடம் முதல் மீண்டும் இயங்கவுள்ளதாகவும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.