9 வருடமாக ஆட்டுக்கொட்டிலில் வசிக்கும் மாவீரரின் தந்தை! இறுதி யுத்த அவலங்கள்

Report Print Mohan Mohan in சமூகம்

இறுதி யுத்தத்தின் பின்னர் தனது சொந்த இடத்தில் மீள்குடியேறிய தந்தை ஒருவர் 9 வருடமாக ஆட்டுக்கொட்டிலில் வசித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியை சேர்ந்த 68 வயதுடைய செ.கோபாலகிருஸ்ணன் என்பவரே இவ்வாறு ஆட்டுக்கொட்டிலில் வசித்து வருகின்றார்.

குறித்த தந்தையின் மகன் ஜெகதீஸ்வரன் என்பவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்து இறுதி யுத்தத்தின்போது களமாடி, கிளிநொச்சி பகுதியில் வைத்து மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீள்குடியேறிய காலப் பகுதியில் இருந்து தனது மனைவியுடன் ஆட்டுக்கொட்டிலில் வசித்து வந்ததாகவும், கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் இவரது மனைவி கடும் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீள்குடியேற்ற அமைச்சினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் வழங்கப்பட்ட நிரந்தர வீட்டுத்திட்டம் புள்ளிகளின் அடிப்படையில் வழங்கப்பட்டதால் தனக்கு நிரந்தர வீடு கிடைக்கவில்லை என குறித்த தந்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவர் பொருளாதார ரீதியில் பல்வேறு நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும், ஆட்டுக்கொட்டிலில் இருந்து தனது வாழ்நாளை கழித்து வருவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.