மலையகத்தின் சில ஆசிரியர்கள் இப்படி மோசமாக நடந்து கொள்கின்றார்களா? தாங்கிக்கொள்ள முடியாத மாணவர்கள்

Report Print Kamel Kamel in சமூகம்

மலையகத்தின் சில ஆசிரியர்கள் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா, வலப்பனை, ஹங்குராக்கெத்த மற்றும் ஹட்டன் ஆகிய கல்வி வலயங்களின் பாடசாலைகளைச் சேர்ந்த சில ஆண் ஆசிரியர்கள் மது போதைக்கு அடிமையாகியுள்ளனர் என சிங்கள நாளிதழ் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.

சில ஆசிரியர்கள் மாலை வேளையிலும் இரவிலும் கடுமையாக மதுபானம் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

இவ்வாறு கடுமையாக மதுபானம் அருந்துவதனால் அவர்களிடம் கல்வி பயிலும் மாணவ மாணவியர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பாடசாலை முடிந்ததும் மதுபான கடைகள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை நிலையங்களுக்குச் செல்லும் சில ஆசிரியர்கள் அதிகளவில் மது அருந்தி, போதையில் விழுந்து கிடப்பதாகவும் மறுநாள் காலை முகம் வாய் கழுவி பாடசாலை செல்கின்றனர் எனவும், இவர்களிடமிருந்து வரும் மதுபான துர்நாற்றம் மாணவ மாணவியரினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை மாற்றுமாறு பெற்றோர் கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, மலையகப் பகுதிகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் மீது கடுமையாக குற்றச்சாட்டை முன்வைத்து செய்தி வெளியிட்டுள்ள குறித்த சிங்கள நாளிதழ் இந்தக் குற்றச்சாட்டுக்கான திடமான ஆதாரங்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers