வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் பம்பலப்பிட்டியில் பரிதாபமாக பலி

Report Print Vethu Vethu in சமூகம்

வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் ஒருவர் ரயிலில் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி - பம்பலப்பிட்டிக்கு இடையிலான ரயில் வீதியில் செல்பி எடுக்க முற்பட்ட வேளையில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 25 வயதான அப்சால் அஹமட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் காதில் இயர்போன் மாடிக்கொண்டு, ரயில் வீதியில் செல்பி எடுக்க முயற்சித்த போது இந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

பங்களாதேஷ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவனின் பிரேத பரிசோதனை நேற்று கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

மருதானையில் இருந்து அழுத்கம நோக்கி பயணித்த ரயிலிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பின்னர் இளைஞனின் உடல் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் மூளை பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers