காலியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

காலி, கொஸ்கொட - துவமோதர பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாக கொஸ்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நேற்றிரவு துவமோதர பிரதேசத்தில் வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இவ்வீட்டை சோதனையிடும் போது வீட்டில் இருந்த கட்டிலின் மெத்தைக்கு கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 ரக குழல் துப்பாக்கி ஒன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers