இலங்கையில் இருந்த வெளிநாட்டு நபரின் கைத்தொலைபேசியில் மோசமான படங்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களை தன்வசம் வைத்திருந்த மாலி நாட்டை சேர்ந்த ஒருவரை பாணந்துறை, வலான மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த வெளிநாட்டுப் பிரஜையிடம் போலி நாணயத்தாள்கள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் மேற்கொண்ட தேடுதலின் போது பிலியந்தலை, உத்தியான மாவத்தை பகுதியில் வைத்து சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடம் இருந்து நான்கு 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் சந்தேகநபரின் கைத்தொலைபேசியில் ஆபாச படங்கள் இருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாலி பிரஜை இன்று மாலை கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

Latest Offers