இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மூளையில் ஏற்பட்ட நோய் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட இளைஞனின் துரதிஸ்டம் தொடர்பாக களனிப் பிரதேசத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
27 வயதான மனோஜ் குணவர்த்தன என்ற இளைஞனே எதிர்பாராத விதமாக துரதிஸ்ட நிலைக்குள் தள்ளப்பட்டவர்.
குறித்த இளைஞனுக்கு கடந்த 2 வருடங்கள் 9 மாதத்திற்கு முன்னர் தலையில் இருந்த கட்டியை அகற்ற அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
எனினும், இந்த அறுவை சிகிச்சை முடிந்து சில மாதங்களுக்கு பிறகு அவரது நோய் நிலை சரியாகி மீண்டும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்.
ஆனால் மீண்டும் சில மாதங்கள் போகும் முன் துரதிர்ஷ்டம் அவரைத் தொடர்ந்துள்ளது. செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையின் பிரதிபலனில் சிக்கல்கள் எழுந்துள்ளன.
சில மருத்துவ பரிசோதனைகள் செய்த பிறகு மீண்டும், தலையில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென டாக்டர்கள் அவருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
முந்தைய அறுவை சிகிச்சை செய்ய அவர் நிறைய பணம் செலவழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கு அயலவர்களும் நண்பர்களுமே உதவி செய்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக மீண்டும் இந்த அறுவை சிகிச்சைக்கு அவர் முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.