6 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபரை தூக்கிக் கொண்டு நீதிமன்றத்திற்கு வந்த பெண்கள்

Report Print Manju in சமூகம்

1999ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரொருவர் கடுமையாக பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் இருபெண்களால் இரத்தினபுரி உயர் நீதிமன்றத்திற்கு தூக்கிச்செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரிபாகம - இரத்தினபுரியில் வசிக்கும் ரது நகதிகே சுவனேசிறி என்ற நபரே இவ்வாறு குற்றச்சாட்டப்பட்டவர்.

1999-08-03ஆம் திகதி சிரிபாகம என்ற இடத்தில் 6 வயது சிறுமியை கடுமையான பாலியல் துஸ்பயோகத்திற்குட்படுத்தியதாக குறித்த நபர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த 23 ம் திகதி, குற்றஞ்சாட்டப்பட்டவரின் பெயர் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்போது, அந்தநேரத்தில் குறித்த நபரை இரண்டு பெண்கள் தூக்கிக்கொண்டு கூண்டுக்குள் கொண்டுசெல்ல முற்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த நீதவான் அவரை வாங்கிலே உட்காரும்படி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் நடந்து 19 ஆண்டுகள் ஆன நிலையில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தற்போது 69 வயது என தெரிவிக்கப்படுகிறது.

துஸ்பியோகத்திற்குட்டபட்ட பெண் 26 வயதான ஒரு குழந்தையின் தாய். குறித்த வழக்கை நிறைவு செய்ய இரு தரப்பினரிடமும் இரு தரப்பினராலும் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நீதிபதி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் இப்போது ஒரு முதியவர். குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு வயதானபோது, சட்டத்திற்கு வயதாகவில்லை.

குற்றம் சாட்டப்பட்டநபர் குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் மனைவி மற்றும் மகள்கள் ஊடாக இழப்பீட்டைச் செலுத்தப்பட வேண்டும்.

மேலும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், அவரது அம்மா அவர்களின் வறுமையை கருத்தில் கொண்டு அவர்கள் பயணச் செலவுகளை வழங்கும்படி நீதிமன்றத்தின் பதிவாளருக்கு கட்டளையிடப்பட்டனர்.

இதனையடுத்து வழக்கு நவம்பர் 13 ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Latest Offers