மட்டக்களப்பில் இன்று நீர் வெட்டு

Report Print Rusath in சமூகம்

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு கல்லடி நீர் வழங்கல் நிலையத்தின் நீர் தாங்கியில் அவசர பராமரிப்பு பணிகள் இடம்பெறவுள்ளதனால் இன்று காலை 08.30 மணி தொடக்கம் பிற்பகல் 01.00 மணிவரை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் நிலைய பொறுப்பதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் அன்றைய தினம் நீரினை சேமித்துவைத்து பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் இப்பராமரிப்பு பணிகள் விரைவாக நிறைவடையும் போது மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நீர் விநியோகம் வழமைபோல் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers