தாயும், மகளும் இருந்த வீட்டிற்குள் புகுந்த இளைஞர்கள் செய்த மோசமான காரியம்! இருவரும் வைத்தியசாலையில்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் தாயும், மகளும் இருந்த வீட்டிற்குள் முகமூடி அணிந்த இளைஞர் கும்பலொன்று புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.

வவுனியா - வேப்பங்குளம், ஆறாம் ஒழுங்கை பகுதியில் உள்ள வீட்டிற்குள்ளேயே நேற்று இரவு ஐந்து பேர் கொண்ட கும்பலொன்று புகுந்துள்ளது.

குறித்த குழு வீட்டில் இருந்த தாயையும், மகளையும் தாக்கி அங்கிருந்த தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம், வீட்டின் யன்னல் கதவுகள், மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றையும் அடித்து உடைத்துள்ளது.

தாக்குதலுக்கு இலக்காகிய தாயும், மகளும் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் தாக்குதல் நடத்திய நபர்கள் தப்பி சென்றுள்ளதாக தெரியருகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers