அரசியல் சூழ்நிலையுடன் உணவக உரிமையாளர் சங்கம் எடுத்துள்ள திடீர் முடிவு

Report Print Manju in சமூகம்

நாட்டில் உள்ள அரசியல் சூழ்நிலையுடன் உணவு விலைகளை குறைக்க உணவகத்தின் உரிமையாளர்களின் சங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. சோறு மற்றும் கொத்து ஒன்றின் விலை ரூ 10 ஆக குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

திடீரென்று இத்தகைய தீர்மானம் எடுக்க என்ன காரணம் என்பதை குறித்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் அசல சம்பத் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் இப்போது நல்லதொரு சுழல் எழுந்துள்ளது என நாங்கள் நம்புகிறோம். ஜனாதிபதியின் தீர்மானங்கள் மற்றும் தற்போதைய பிரதமர் மீது முழு நம்பிக்கை உள்ளது.

இந்த நம்பிக்கையின் ஆதாரமாக நாங்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டோம். இன்றிலிருந்து நாட்டிலுள்ள அனைத்து ஹொட்டல்களிலும் 15 ரூபாயாக தேநீர் விற்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

Latest Offers