மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சுற்று வேலி அமைக்கும் பணிகள் ஆரம்பம்

Report Print Ashik in சமூகம்

மன்னார், ஆட்காட்டி வெளியில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதுடன், மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றி சுற்று வேலி அடைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த சிரமதான பணிகள் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினரால் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தினத்தை நினைவு கூறும் வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி தமிழர் தாயக பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமைக்கு அமைய குறித்த பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதன்போது, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்,மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் அப்பிரதேச இளைஞனர்களும் இணைந்து குறித்த பணியினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.