திருகோணமலை கிழக்கு மாகாண சபைக்கு பின்னால் உள்ள மயானத்தில் மது அருந்திக் கொண்டிருந்த நான்கு இளைஞர்களை இன்று கைது செய்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை இந்து மயானத்துக்குள் உள்நுழைந்து புதைக்கப்பட்டிருந்த சடலங்களை மதிக்காமல் அதற்குள் கட்டப்பட்டிருந்தது கட்டடங்களில் இருந்து கொண்டு மது அருந்தி கொண்டிருப்பதாகவும், பொது இடத்தில் மது அருந்தி வருவதாகவும் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் 4 இளைஞர்களையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நான்கு இளைஞர்களும் திருகோணமலை கிரீன் வீதியை சேர்ந்த 22 வயது மட்டும் 25 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதுடன் இவ்வாறான செயற்பாடுகளில் மற்றைய இளைஞர்கள் நடக்கக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு தெளிவுபடுத்தி வருவதுடன் கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.