கட்டுவன்வில பகுதியில் கோர விபத்து! பலர் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Navoj in சமூகம்

பொலன்னறுவை - செவனப்பிட்டி பிரதேசத்தில் கட்டுவன்வில பகுதியில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பில் இருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு ஏறாவூர் நோக்கி வந்து கொண்டிருந்த லொறி ஒன்றே பேருந்துடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers