யாழ்.சிறைசாலையில் கைதி ஒருவர் தற்கொலை முயற்சி!

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், குறித்த நபர் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

உடும்பிராய் பகுதியைச் சேர்ந்த இராஜேஸ்வரன் கஜன் (வயது - 23) என்பவரே இவ்வாறு தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தன்னைப் பார்ப்பதற்கு உறவினர்கள் எவரும் சிறைச்சாலைக்கு வரவில்லை என்ற மனவிரக்தியிலேயே அவர் தற்கொலை முயற்சியை மேற்கொண்டார் என்று சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவித்தன.

எனினும் தற்கொலைக்காக அவர் தூக்குப் போட்டுக்கொண்ட முறை தொடர்பில் சிறைச்சாலையிலிருந்து தகவலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

Latest Offers