வைத்தியரின் ஏ.டி.எம் அட்டைய திருடி பெண்ணொருவர் செய்த செயல்!

Report Print Manju in சமூகம்

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியரின் பையில் இருந்த ஏ.டி.எம் அட்டையை திருடிய ஒரு பெண்ணொருவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த சந்தேக நபரான பெண் சி.சி.டி.வி கமெரா மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 15ம் திகதி மாலை 5 மணிளயவில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் மருத்துவர்கள் மேசையில் இருந்த கைப்பையைத் திருடி அதிலிருந்த தங்க மோதிரம், 3000 ருபாய் பணம் மற்றும் ஏ.டி.எம் அட்டையையும் திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் அட்டையைப் பயன்படுத்தி வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டமை சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.

பணம் பெற்றுக்கொண்ட பின்னர் வைத்தியருக்குச் சொந்தமான அடையாள அட்டை மற்றும் கைப்பையை மீண்டும் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் வீசிவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்தியர் முறைப்பாடு செய்தமையையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேக நபரின் விபரங்களை தெரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டுமென பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Latest Offers