58 இளைஞர், யுவதிகள் அதிரடியாக கைது

Report Print Manju in சமூகம்

பேஸ்புக் சமூக வலைத்தளத்தினூடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நிகழ்வொன்றில் கலந்து கொண்ட 58 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஹப்புத்தளை விஹாரகல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழுவினர் நேற்று இரவு ஹப்புத்தளையில் அமைந்துள்ள ஹோட்டலில் இடம்பெற்ற விருந்து நிகழ்ச்சியில் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹப்புதளை பொலிஸ் அதிகாரிகள் இன்று மதியம் குறித்த ஹோட்டலைச் சுற்றி வளைத்துள்ளனர்.

அந்த நேரத்தில் குறித்த இளைஞர் யுவதிகள் நினைவுகளை இழந்து போதையில் ஹோட்டலுக்குள் சுற்றித்திரிந்ததாக பதுளை பொலிஸ் பொறுப்பதிகாரி சுதத் மாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் மத்தியில் 57 ஆண்களும் ஒரு யுவதியும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் 18- 30 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் கொழும்பு, நீர்கொழும்பு, கம்பளை மற்றும் மொனராகலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Latest Offers