புதிய பிரதமராக மகிந்த பதவியேற்றதையடுத்து ஹட்டனில் ஆராவாரம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து, இன்று ஹட்டனில் பட்டாசு வெடித்து ஆராவாரம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வின் போது, ஹட்டன் நகருக்கு வருகை தந்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு நகரவாசிகள் பாரிய வரவேற்பினை அளித்து பொன்னாடை போர்த்தி வரவேற்பளித்தனர்.

புதிய பிரதமரான மகிந்த ராஜபக்ஷவின் உருவ படங்களை ஏந்தி கோஷமிட்டு கொண்டாடினார்கள்.

இதன்போது ஹட்டன் நகரத்தில் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை, அருணலு மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் இணை தலைவருமான டாக்டர். கிர்ஷான் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி இன்று ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நிலவரம் தொடர்ந்தும் சுபீட்சமாக இடம்பெற வேண்டும் எனவும், மகிந்த மற்றும் மைத்திரியின் இந்த புதிய அரசாங்கம் பல அபிவிருத்திகளை கண்டு புதிய பயணத்தை நோக்கி முன்னெடுத்து செல்ல வேண்டும் எனவும் வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers