கிளிநொச்சியில் புதிய பிரதமரை வரவேற்கும் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள்!

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சியில் பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் புதிய பிரதமரை வரவேற்கும் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் க.ஜெயகுமாரனின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது பட்டாசுகள் வெடித்து தமது மகிழ்ச்சியை தெரிவித்ததுடன், பொங்கலும் பரிமாறப்பட்டது.

இதில் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

Latest Offers