டுபாய் செல்லவிருந்த அரச அதிகாரி செய்த அசிங்கமான காரியம்

Report Print Manju in சமூகம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் டுபாய் செல்லவிருந்த இலங்கை விவசாயத் திணைக்களத்தின் பிரதான அதிகாரியொருவர் அதிக மதுபோதையில் இருந்த காரணத்தினால் அவரை விமானத்திலிருந்து இறக்க விமான நிலைய குழுவினர் முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எமிரேட் விமான நிலையத்திற்குச் சொந்தமான EK. 349 என்ற விமானத்தில் ஏறிய குறித்த அதிகாரி அதிக மதுபோதையில் இருந்தபடியால் விமான பணியாளர் குழுவினர் இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் விமான பயணத்திற்கு தடை ஏற்படும் என்ற காரணத்தில் குறித்த அதிகாரியிடம் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் எழுத்துமூல அறிக்கையைப் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.