அர்ஜுனவை கைது செய்யக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

தெமடகொட பெற்றோலிய வள கூட்டுத்தாபன வளாகத்தினுள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யுமாறு தெரிவித்து அதன் ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்று இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், சம்பவத்தில் ஒருவர் பலியான நிலையில் மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த போராட்டத்தின் காரணமாக எரிபொருள் நிலையங்களில் நீண்ட வாகன வரிசை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணத்துங்க இன்று பிற்பகல் பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தினுள் செல்ல முயற்சித்த போது பணியாளர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.

அதனை தொடர்ந்து, அர்ஜுன ரணதுங்கவின் மெய்பாதுகாவலர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Latest Offers