யாழ்.சிறைச்சாலையில் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த விளக்கமறியல் கைதி

Report Print Gokulan Gokulan in சமூகம்

யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறில் கைதியொருவர் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த வேளை சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது, காப்பாற்றப்பட்ட கைதியை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் அனுமதித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்.உரும்பிராய் பகுதியை சேர்ந்த 23 வயதான இராஜேஸ்வரன் கஜன் என்ற கைதியே இவ்வாறு தற்கொலை செய்துக்கொள்ள முற்பட்டுள்ளார்.

குறித்த நபர் திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் காவல்துறையினரால் கைது செய்யபட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.

விளக்கமறியலில் உள்ள தன்னை உறவினர்கள் எவரும் பார்க்க வருவதில்லை எனும் விரக்தியான மனநிலையினாலேயே குறித்த நபர் தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார் எனவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers