யாழில் நடந்த பயங்கரம் - நபர் ஒருவர் வெட்டிக்கொலை - மனைவி படுகாயம்

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட வாள்வெட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ் - வடமராட்சிபகுதியில் நேற்று இரவு வாள் வெட்டு சம்பவத்தில், 66 வயதான சிவசிறீசித்திர வடிவேலன் என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவியான நிர்மலாதேவி (53 வயது) படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மருமகனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

சம்பவம் இடம்பெற்ற போது, சந்தேக நபர் கடும் மதுபோதையில் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக தகவல்கள் - சுதந்திரன்