யாழில் இளைஞர் ஒருவர் கைது!

Report Print Murali Murali in சமூகம்

யாழில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரையே மானிப்பாய் பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞனை கைது செய்யும் போது அவரிடமிருந்து இரண்டு வாள்களை தாம் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது வாள் வெட்டு குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு தொடர்பு இருப்பதாக கண்டறிந்ததை அடுத்தே இளைஞனை கைது செய்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனரை்.