யாழில் வாள் வெட்டு! ஒருவர் உயிரிழப்பு

Report Print Murali Murali in சமூகம்

யாழ். வடமராட்சி - கிழக்கு குடத்தனை - மாளிகைத்திடல் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபரின் மனைவி படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

உறவினர்களுக்குள் ஏற்பட்ட பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான முரண்பாடே கொலைக்கு காரணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 66 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதலை உயிரிழந்த நபரின் மருமகன் மேற்கொண்டுள்ளதாகவும், அவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Latest Offers