தமிழர் பகுதியில் திடீரென வீதிகளை மூடிய கடற்படையினர்! பெரும் சிரமத்தில் மக்கள்

Report Print Ashik in சமூகம்

முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லும் பிரதான வீதிகளை கடற்படையினர் மீண்டும் இன்றும் முற்கம்பிகள் மூலம் அடைத்துள்ளனர்.

இதன் காரணமாக அந்தப் பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோரான்ஸ் லியோ ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிக்குளம் கிராமத்திற்கு கடற்படை முகாமினூடாக செல்லும் பிரதான வீதியை கடந்த 21 ஆம் திகதி திடீர் என கடற்படையினர் முற்கம்பிகள் கொண்ட வேலியினால் இடை மறித்து அடைத்தமையினால் மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு வெளியிட்டனர். இதனையடுத்து குறித்த வீதியை கடற்படையினர் மீண்டும் திறந்து விட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வீதியை கடற்படையினர் மீண்டும் இன்று காலை முற்கம்பிகளினால் வீதியை மூடியுள்ளதாககவும் இதனால் முள்ளிக்குளம் மக்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

அனைவரும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்ததோடு, முள்ளிக்குளம் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள், ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடற்படையினரின் குறித்த செயற்பாடுகளை கண்டித்து முள்ளிக்குளம் கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers