வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் கஞ்சா விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரை இன்று அதிகாலை 3 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து பியத்தலாவ நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் 51வயதுடைய கல்நாட்டினகுளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் வவுனியா, நொச்சிமோட்டடைப்பாலத்தில் வைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டபோது தனது உடமையில் 80 கிராம் கஞ்சாவினை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக போதை ஒழிப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோது ஏற்கனவே குறித்த நபர் மீது போதைப் பொருட்களுடன் தொடர்புபட்ட 4 வழக்குகள் இருக்கின்றமை தெரியவந்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சாவினை விற்பனை செய்து வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் இவரை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.