வெடுக்குநாறிமலைக்குள் அத்து மீறி செயற்பட்டால் கைது: பொலிஸாரினால் அச்சுறுத்தல்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - வெடுக்குநாறிமலை, ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு குழாய் கிணறு அமைப்பதற்கு ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு நெடுங்கேணி பொலிஸார் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நேற்று மேற்கொள்ளப்பட்ட குழாய் கிணறு அமைக்கும் முயற்சிக்கு பொலிஸாரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் ஊடாக, கிணறு அமைக்க வந்தவர்களிடம் பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு கிணறும் அமைக்க முடியாது என்று தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் கிணறுக்கான நிதி திரும்பி போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.