மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண்ணொருவர் பலி

Report Print Mubarak in சமூகம்

அனுராதபுரம் - மிஹிந்தலை பிரதான வீதியின் அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் பகுதியில் இன்று மோட்டார் சைக்கிளொன்று வீதியின் குறுக்கே பயணித்துக்கொண்டிருந்த பெண் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான பெண் சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் அனுராதபுரம் தன்னாயங்குளம் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய கங்காணம்லாகே வேலின் நோனா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.