மன்னாரில் ஐ.தே.க உறுப்பினர் ஜீ.எம்.சீலன் சற்று முன்னர் கைது

Report Print Ashik in சமூகம்

ஐக்கிய தேசியக்கட்சியின் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஜீ.எம்.சீலன் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி கட்டையடம்பன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சற்று முன்னர் மடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

தற்போது ஐக்கிய தேசியக்கட்சியின் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஜீ.எம்.சீலன் மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுளார்.

அவர் ஏன்? ஏதற்காக கைது செய்யப்பட்டார் என்ற விடயம் இதுவரை வெளியாக வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers