பந்து தலையில் வீழ்ந்து மயக்கமடைந்த இலங்கை கிரிக்கெட் வீரர்

Report Print Manju in சமூகம்

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினருக்கும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டத்தின் போது இலங்கை வீரரின் தலையில் பந்து வீழ்ந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சோர்ட்லெக் பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இளம் வீரர் பதும் சங்கவின் தலையிலே பந்து வீழ்ந்துள்ளது. அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் அடித்த பந்தை நிசங்க தடுக்க முயன்றுள்ளார். எனினும் பந்து நிசங்கவின் தலையைத் தாக்கியுள்ளது.

அவர் ஹெல்மட் அணிந்திருந்தபோதும் தலையில் பந்து பட்டவுடன் அவர் தலையைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

20 நிமிடங்கள் நினைவற்ற நிலையில் கிடந்த நிசங்கவை அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் நிசங்க சுயநினைவுடன் இருப்பதாகவும்? கழுத்தில் மட்டுமே வலி இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Offers