வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கையரின் இறுதிக்கிரிகை

Report Print Rusath in சமூகம்

அண்மையில் மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்று மாரடைப்பு காரணமாக மரணமாகிய இளைஞனின் இறுதிக்கிரிகைகள் இன்று இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர், ஐயங்கேனி, ஹக்பர் பள்ளி வீதியை சேர்ந்த பஸீர் சுஹைல் (வயது 27) என்பவர் சவூதி அரேபியா - ஜித்தாவிலுள்ள ஹோட்டலில் வேலை செய்துகொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு கடந்த புதன்கிழமை மரணமாகியுள்ளார்.

இவர் கடந்த ஐந்தரை வருடங்களாக சவூதி அரேபியாவில் தொழில்வாய்ப்புப் பெற்று வேலை பார்த்து வந்தார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் சவூதி அரேபியா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவரது சொந்த ஊரான ஏறாவூருக்கு கொண்டுவரப்பட்டு காட்டுப்பள்ளி வாயலில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers