குருநாகல் பொத்துஹர புகையிரத நிலையத்தில் பதற்ற நிலை!

Report Print Murali Murali in சமூகம்

புகையிரதம் தாமதமானதால் பொத்துஹர புகையிரத நிலையத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

புகையிரத பாதையினை இடைமறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து புறப்படுகின்ற புகையிரதம் தாமதமாகியதால் பயணிகள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக வடக்கிற்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.