தெருவில் நடந்து கொண்டிருந்த பெண்ணின் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு - வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணிப் பகுதியிலுள்ள வைத்தியசாலையில் தனது மகளை பார்வையிடச் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் தங்க சங்கிலியை இனம் தெரியாத இருவர் அறுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இனம் தெரியாத நபர்கள் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

இவ்விடையம் தொடர்பில் குறித்த பெண் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, இரவு நாவற்கேணி எனும் இடத்தில் உள்ள ஆட்டுப் பண்ணை ஒன்றில் ஆடு ஒன்றை இனம் தெரியாத நவர்கள் களவாடிச் சென்றுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.