விறகு வெட்ட சென்றவரின் கண்ணை தோண்டிய கரடி!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - பக்மீகம பகுதியில் விறகு வெட்ட சென்றவரின் கண்ணை கரடி தோண்டி முகத்தை காயப்படுத்திய நிலையில் இன்று மாலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கரடி தாக்குதலுக்கு உள்ளானவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான அதே இடத்தைச் சேர்ந்த சமீர மதுசங்க (வயது 38) எனவும் தெரியவருகின்றது.

வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுப்பகுதிக்குள் விறகு வெட்டுவதற்காக சென்றபோது மரத்திற்கு பின்னால் மறைந்து நின்ற கரடி தன்னை தாக்கியதாகவும், தன்னுடன் சென்றவர் கரடியைக் கண்டவுடன் தப்பிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

கரடி தாக்குதலுக்குள்ளான நபர் காட்டில் விழுந்து கிடந்த நிலையில் அயலவர்களினால் அருகிலுள்ள கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, கண்ணில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதால் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலை கண் வைத்திய சிகிச்சைப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...