கிளிநொச்சியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலத்தில் இவ்வருடம் தரம் ஜந்து புலமை பரிசு பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் நேற்று கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சித்தியடைந்த மாணவர்களை வாழ்த்தி கௌரவித்துள்ளார்.

இவ்வருடம் கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்தில் 71 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 15 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதோடு,மாணவன் சூ.சத்தியன் 191 புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 9ம் நிலையை பெற்றுள்ளான்.

அத்தோடு 70 புள்ளிக்கு மேல் நூறு வீத சித்தியும், 100 புள்ளிக்கு மேல் 90 வீத சித்தியும் பாடசாலை பெற்றுள்ளதோடு, 65 மாணவர்கள் நூறு புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.

இந்த மாணவர்களே இன்று கௌரவிக்கப்பட்டனர். வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Latest Offers

loading...