நீலன் அறக்கட்டளையின் பயங்கரவாத நடவடிக்கைகள் போராளிகளால் முறியடிப்பு! தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர்

Report Print Nesan Nesan in சமூகம்

நீலன் அறக்கட்டளையின் பயங்கரவாத நடவடிக்கைகள் போராளிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா இன்று தெரிவித்துள்ளார்.

பிரத்தியோக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் உத்தியோகபூர்வ கடித தலைப்புகளை தாயகத்திலுள்ள சமூக விரோதி ஒருவர் திருடி எமது கட்சியின் பேரில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக புலம்பெயர் தனிநபர் ஒருவருக்கு அதை பல இலட்சம் ரூபாய்களுக்கு விற்றுள்ளார்.

இதை வாங்கிய நபர் சில தீய செயல்களை செய்வதற்கு புலம்பெயர் தேசத்திலிருந்து முயற்சித்துவருவதால் அவரின் பகிரங்க அச்சுறுத்தலை தடுக்கும் முகமாக இன்று எமது கட்சியின் புதிய கடிதத் தலைப்பினை நேரலையில் அறிமுகம் செய்துவைத்து பயங்கரவாத செயற்பாட்டை செய்யமுனைந்த குறிப்பிட்ட சந்தேக நபருக்கு தக்க பதிலடியினை கொடுத்துள்ளோம்.

அந்த வகையில் இன்றிலிருந்து எமது கட்சியின் பழைய கடித்தத் தலைப்பிலிருந்து வெளிவரும் எந்தவிதமான செய்திகளுக்கும்“புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி”பொறுப்பேற்காது என்பதை அனைவருக்கும் தெரிவிப்பதுடன் குறித்த தீய செயற்பாட்டில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பாக தகுந்த சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டவுள்ளது என இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்திருந்தார்.