அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தமிழ் தின போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற மாணவியான பா.குமுதினியை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
வவுனியா, பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நேற்று பாடசாலை அதிபர் கே.நந்தகுமாரின் தலைமையில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
பூந்தோட்டம் மகாவித்தியாலய வரலாற்றில் மாணவியொருவர் தேசிய ரீதியில் நடைபெற்ற தமிழ் தின போட்டியில் பங்கு பற்றியமை இதுவே முதல் தடவையாகும்.
அந்த வகையில் தேசிய தமிழ் தின போட்டியின் பிரிவு நான்கில் சிறுகதை போட்டியில் பங்குபற்றிய பா.குமுதினி முதலாம் இடத்தை பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றி பாடசாலைக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்த நிகழ்வில் கோட்ட கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா, வவுனியா கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் ஐங்கரன், பழைய மாணவர் சங்க தலைவர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, அகில இலங்கை ரீதியான தமிழ் தினப் போட்டி கடந்த சனிக்கிழமை மாத்தளையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.