இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

Report Print Ajith Ajith in சமூகம்

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மண்டபம் பகுதிகளை சேர்ந்த சுமார் 3,000 மீனவர்கள் 700 படகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இதன்போது அவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர் அவர்களின் படகுகள் மீது கல்வீச்சு தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் 50 படகுகளில் இருந்த மீன்பிடி உபகரணங்களையும் அவர்கள் சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Latest Offers