வவுனியாவில் 10 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் 10 இலட்சம் ரூபா பணம் இனம் தெரியாத நபர்களினால் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா - ஈரப்பெரியகுளம் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் நேற்று மாலை 6.30 மணியளவில் பணத்தை பரிமாற்றம் செய்வதற்காக வங்கிக்கு எடுத்துச் செல்லும் போதே குறித்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா இ.போ.ச சாலைக்கு அருகில் வெள்ளை நிற மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், குறித்த ஊழியரை வழிமறித்து பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து பணத்தை பறிகொடுத்த ஊழியர் குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு திரும்பிச் சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளதுடன் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers