மன்னாரில் மரித்த ஆன்மாக்களின் நினைவு நாள் அனுஷ்டிப்பு

Report Print Ashik in சமூகம்

மரித்த ஆன்மாக்களின் நினைவு நாளான இன்று நாட்டின் பல பாகங்களில் விசேட திருப்பலி நடைப்பெற்று வருகின்றது.

இதனை முன்னிட்டு மன்னார் - பேசாலை புனித வெற்றி அன்னை கத்தோலிக்க சேமக்காலையிலும் இன்று காலை விசேட திருப்பலி நடைப்பெற்றுள்ளது.

இவ்விசேட திருப்பலி அருட்தந்தை தேவராஜா கொடுதோர் மற்றும் உதவி பங்குத்தந்தை ஆகியோரினால் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளதுடன் அருட்தந்தையினால் மரித்த ஆன்மாக்களின் கல்லறைக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டுள்ளது.

இத்திருப்பலியில் 1000ற்கும் மேற்பட்ட மரித்த விசுவாசிகளின் உறவினர்கள் கலந்து கொண்டு மரித்தவர்களின் ஆன்மாக்களை நினைவு கூர்ந்துள்ளனர்.

நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மரித்த விசுவாசிகளின் உறவினர்கள் மரித்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்து இன்றைய தினம் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers