கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை பகுதியில் கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் - ஆரியவன்ச மாவத்தையைச் சேர்ந்த ஜெயசூரிய ஆராய்ச்சிக்கே மேரியன் நிமல்கா (31 வயது) என்பவரே நேற்றைய தினம் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தளாய் பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பெண்னின் வீட்டை சோதனையிட்ட போது 12 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் கந்தளாய் தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கந்தளாய் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Latest Offers