கிளிநொச்சியில் 9 வருடங்களுக்குப் பின் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்ட காணி

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மாவட்ட பொது நூலகத்திற்கு சொந்தமான காணி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின் படையினரால் பொது நூலகத்திற்கு சொந்தமான காணி கைப்பற்றப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட பொது நூலகம் பிறிதொரு இடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது.

இதனையடுத்தே குறித்த காணியினை இராணுவத்தினர் 9 வருடங்களுக்குப்பின் இன்று உத்தியோகப்பூர்வமாக கிளிநொச்சி பிரதேச சபை தவிசாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் குறித்த காணியினை விடுவிப்பதாக இராணுவத்தினர் உறுதியளித்திருந்ததை அடுத்தே இக்காணி விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.